Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

7 months ago
in செய்திகள்

13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகம் திருமேனி யோகநாயகன் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள இக்கடிதத்தில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள இச்சமயத்தில், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக ஏற்பாடுகள் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள மாகாண சபை முறைமை அதிகாரப் பகிர்வை ஊக்குவிக்கும் அரசியலமைப்புச் சூழல் தீர்வாக கருதப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமை இறுதி அரசியல் தீர்வாக இல்லாத போதிலும், அது அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உடன்படிக்கையாகும் எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உட்பட பல்வேறு சமூகங்கள் அரசியல் சமத்துவம், நிர்வாக பங்கேற்பு மற்றும் உள்ளூர் மட்டத் தீர்மானங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில், தற்போதைய அரசியலமைப்பின் முழுமையான அமலாக்கம் உறுதி செய்யப்படுதல் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாக அமையும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறையில் செயல்படுத்துதல், மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள சட்டத் திருத்தங்களை பாராளுமன்றம் ஊடாக ரத்து செய்து, பழைய விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் ஆகியவை ஜனநாயக நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளாக அமையும் என ஐக்கிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் மக்கள் ஜனநாயக வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதும், அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்புச் சூழலுக்குள் தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் என்பதும் வெளிப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கும் ஆட்சி முறையை வலுப்படுத்தும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், 13ஆம் திருத்தச் சட்டத்தை பாதுகாத்து அதனடிப்படையிலான அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மரியாதையுடன் கோரப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
Next Post
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் - சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.