Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பதினைந்து வருடகாலமாக கஞ்ஜா வியாபாரம் செய்த நபர் நேற்று14 இரவு ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார்.

ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பொலிஸார் செங்கலடி பிரதேசத்தில் (14.02.2026 ) மேற்கொண்ட தேடுதலின்போது கேரள கஞ்சா மற்றும் பெருந்தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 36 வயடைய வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமந்த சிறிவர்தன தெரிவித்தார். இவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் சிறிய பக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த நூறு கிராம் கேரள கஞ்சா ஆகியன வீட்டிலுள்ள பூஜை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

ஏறாவூர்ப் பொலிஸாரின் விசேட பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன , ஏறாவூர், வாழைச்சேனைப் பிரதேசத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்ஸ். ஜறூல் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பிரதம பொலிஸ் பரிசோதகர் நிரோசன் பெணாந்து , பொலிஸ் சார்ஜன்ட் சரத் விஜயசேன (4950030), பொலிஸ் சார்ஜன்ட் எச்எம்யுபீ. ஹேரத் (67318) , பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிஜிஎன். பிரதீப் குமார (87111) , ஆர். ஹம்சா (105107) , கே.எம்எம்எஸ். சேனவிரத்ன (102719) மற்றும் மகளிர் பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ். ரேனுகா (12112) ஆகியோருடன் பொலிஸ் விசேட நடவடிக்கைப்பிரிவினரும் இத்தேடுதலில் பங்கேற்றிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு