வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் “உட்படுத்தலை நோக்கி முன்னேறுதல்” என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைக் கல்விக்கு இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் செவிப்புல கருவிகள் வழங்கப்பட்டன.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, “புகலிடம்” நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்திரு. சாமுவேல் சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம், வலயக் கல்வி அலுவலகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
KNH‑BMZ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “புகலிடம்” நிறுவனத்தால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.









