Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அஸ்வெசும” சலுகை; 16,800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை

“அஸ்வெசும” சலுகை; 16,800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை

7 months ago
in செய்திகள்

அஸ்வெசும சலுகையைப் பெற தகுதியுடைய 16800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் சிலருக்கு, தாம் அஸ்வெசும சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் என்பது கூடத் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், இதன்படி பார்க்கும் போது வங்கிக் கணக்குகள் திறக்காத அதிக பயனாளிகள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் 2,700 பயனாளிகள் வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை.

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 1000 பயனாளிகள் அஸ்வெசும சலுகையைப் பெற வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை. வங்கிக் கணக்குகளைத் திறக்காத இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையான குழுக்களே வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை. ஏழைக் குழுவில் மட்டும் சுமார் 8,900 பேர் வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை. “அஸ்வெசும” சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் “அஸ்வெசும” என்ற பெயரில் ஒரு அரச வங்கியில் கணக்கைத் திறக்க வேண்டும்.

இரண்டு கட்டங்களின் கீழ் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் கடந்த ஆண்டு (2025) ஜூலை முதல் இந்த ஆண்டு பெப்ரவரி வரை எட்டு மாதங்களுக்கு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். கணக்குகளைத் திறந்தவர்களுக்கு பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் மார்ச் மாதத்தில் தங்கள் கணக்குகளைத் திறந்து அதைப் பற்றி தெரிவித்தால், முந்தைய தவணைகளுடன் சேர்த்து அவர்களுக்கு பணம் வழங்கப்படும். கணக்கு இல்லாத மக்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி பின்னர் ஒரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு