தெரணியகல, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலை பிரிவில் நேற்று (20) மாலை மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் வாக்குவாதம் முற்றியதையடுத்தே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த மருமகன் தெரணியலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் பார்ப்பதுடன் ஒரு பிள்ளையின் தந்தையுமாவார்.
உயிரிழந்தவரின் மாமனார் அப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தெரணியல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








