கல்கிசை, வில்லியம் பிரதேசத்தில் சுமார் 110 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








