Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் அவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதற்கமைவாக, இந்தக் குற்றத்திற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கொட்டாவை மற்றும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுகளிலும், 17 ஆம் திகதி கஹதுடுவ பொலிஸ் பிரிவிலும் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, இந்தக் குற்றத்தின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தூவ பிரதேசத்தில் வைத்து நேற்று (21) கைது செய்துள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு