Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,கிழக்கு மாகாணசபையின் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளுராட்சிமன்றங்களின் செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மத்திய அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீடுகள் மாகாணசபையினால் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள், வெளிநாட்டு நிதிகள் என பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முக்கியமாக முந்தனையாறு திட்டம் மற்றும் கிரான்புலிபாய்ந்தகல் வீதியுடான பாலம் அமைத்தல் உட்பட மாவட்டத்தில் துறைசார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வினையும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் தமது அறுவடை செய்த நெல்லை காயவைப்பதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி காயப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நெல் காயவைக்கும் இயந்திரங்களையும் களஞ்சிய சாலைகளை அமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

அத்துடன் கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அனுமதி பத்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளதனால் மண் விலை அதிகரித்துள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மண் தொடர்பிலான தீர்மானங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என்ற பணிப்புரைகள் விடுக்கப்பட்டதுடன் அதற்கு தேவையான உதவிகளை அமைச்சின் ஊடாக வழங்கவும் வாகன தேவைகளை பிரதேசசபைகள் ஊடாகவும் வாடகை அடிப்படையிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

இதன்போது மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதன் காரணமாக திட்டங்களை விரைவுபடுத்தி முடிவுக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தியினால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
சுமந்திரன் கட்சிக்குள் தனக்கு எதிரானவர்களை அச்சுறுத்த சட்டத்தை பயன்படுத்துகிறாரா?

சுமந்திரன் கட்சிக்குள் தனக்கு எதிரானவர்களை அச்சுறுத்த சட்டத்தை பயன்படுத்துகிறாரா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.