Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்றைய தினம் (26/02/2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்போர்டு ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக்கொடுத்தமை வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர,

இது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆடிய ஒரு நாடகம் எனச் சாடினார்.

விவசாயிகளின் சாபம் மற்றும் நிலக்கரி மோசடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சலேயைக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

2018-இல் சலே சஹ்ரானைச் சந்தித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், அந்த காலப்பகுதியில் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் பணியாற்றி வந்தமையால் அவர் இலங்கையிலேயே இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிறந்த புலனாய்வு அதிகாரியான சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் போன்றவர்களை வெளியே நடமாட விடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டயஸ்போராவுக்கு நோகும் என்பதால் ஜனாதிபதி இன்று ‘ரணவிருவா’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்றும், சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாததற்கும் இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் சொற்களைக் கேட்காமல் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் வைரம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.