Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் வீதிப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்த ட்ரோன் கமெராக்களை நன்கொடையாக வழங்கிய ஜப்பான்

இலங்கையில் வீதிப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்த ட்ரோன் கமெராக்களை நன்கொடையாக வழங்கிய ஜப்பான்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் வீதிப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) ட்ரோன் கமெராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, இலங்கையின் வீதிப் போக்குவரத்துத் துறையில் நிலச்சரிவுகளை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் “SLIDER” (Strengthening The Capacity of Landslides for Resilient Road Transportation in Sri Lanka) திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

JICA முகமையின் பிரதிநிதி நோரு மத்சுனோஷிட்டாவினால் (Noru Matsunoshita), வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் பாஸ்கரனிடம் இந்த ட்ரோன் கமெராக்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

இந்த ட்ரோன் கமெராக்கள் மூலம் வீதிகளில் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் நேரடியாகச் செல்ல முடியாத இடங்களைப் பற்றிய துல்லியமான மற்றும் தெளிவான காட்சிகளை இலகுவாகப் பெற முடியும்.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளைப் பயன்படுத்தி வீதித் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு (Planning & Design) பணிகளை மிகவும் வேகமாகவும் இலகுவாகவும் முன்னெடுக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பாஸ்கரன் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான விசேட தொழிநுட்பப் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு JICA நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் JICA முகமை சார்பில் எரிக்கோ சதோ (Eriko Sato), தொமோயுகி வடா (Tomoyuki Wada), ரியோட்டா கிமுரா (Ryota Kimura), எஸ்.கே.பி. கிறிஸ்டின் (S.K.P. Christeen) ஆகியோர் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் எச்.எச். ஹெட்டியாராச்சி, மேலதிக பணிப்பாளர்கள் நாயகம் தர்ஷிகா ஜயசேகர, ஏ.பி.கே. அபேதீர, வசந்த குமார் (பதவி வழி), பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரணசோம உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்பு; ஒரேநாளில் 621 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்பு; ஒரேநாளில் 621 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.