வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர், மொத்தமாக 405 லீற்றர் கசிப்புடன் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, வவுணதீவு பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை 365 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
அதேவேளை, வாழைச்சேனை பொலிஸார் 5 லீற்றர் கசிப்புடன் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை 30 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன், கல்குடா பொலிஸ் பிரிவில் மற்றொருவர் 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.








