கந்தளாய் – வெலிங்டன் சந்தியில் இன்று காலை 10:30 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பேராறு பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று, வெலிங்டன் சந்தி பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன்போது வீதியை விட்டு விலகிய கார், அருகில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மோதிய கார் மற்றும் அந்த கடை முன் பக்கம் ஆகியன சேதமடைந்துள்ளன. அத்துடன் அங்கிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்றின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








