Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசங்களின் இறைமை மீதான பேரிடி; அலி காமெனி படுகொலைக்கு ரிஷாத் கடும் கண்டனம்!

தேசங்களின் இறைமை மீதான பேரிடி; அலி காமெனி படுகொலைக்கு ரிஷாத் கடும் கண்டனம்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் மட்டுமல்ல; ஒரு தேசத்தின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். சர்வதேச சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மீறி இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் பாரிய ஸ்திரமின்மையை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திர தேசங்களை இல்லாதொழிப்பதற்கான அப்பட்டமான அத்துமீறல்களே இவை. இந்த அராஜகங்களை நீதிக்கு முன்னால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

ஆதரவு என்ற போர்வையில் நாடுகளின் உரிமைகளைக் களவாடும் ‘கபட அரசியலுக்கு’ மத்திய கிழக்கு நாடுகள் மண்டியிடக் கூடாது. இறைமை அடிமைப்படுத்தப்படுவதை ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது.

வன்முறைகள் மற்றும் படுகொலைகள் மூலம் ஒருபோதும் சமாதானத்தையோ அல்லது நீதியையோ அடைந்துவிட முடியாது.

எனவே, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைப் பேச்சுகள் ஊடாகத் தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகின்றது. ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.” – என்று ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
அரச நிர்வாகத்தில் பிரஜா சக்தி தலையிடுவதாக குற்றச்சாட்டு

அரச நிர்வாகத்தில் பிரஜா சக்தி தலையிடுவதாக குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு