Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் தையிட்டி மீனவர்கள் 05 நாட்களாக மாயம்; தேடுதல் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

யாழில் தையிட்டி மீனவர்கள் 05 நாட்களாக மாயம்; தேடுதல் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

44 வயதுடைய தங்கராசா அமல்ராஜ், 30 வயதுடைய செல்வராசா ராஜ்குமார் என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அந்த மீனவர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை.

அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய மீனவர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர்.

இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்கள் கடற்படையினர், பொலிஸார் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்ற கூடாது? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இதுவரை 3500 லீட்டர்கள் எரிபொருளை பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம். எல்லை தாண்டி சென்று தேடவும் முடியாது. நாங்கள் தேடி சென்றவேளை இந்திய கடற்படையினர் எங்களை விரட்டினர். எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும்; ட்ரம்ப் பகிரங்கம்

தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும்; ட்ரம்ப் பகிரங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு