Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ( IRIS Bushehr) ஈரானியக் கப்பலில் இருந்த 208 கடற்படை வீரர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக (கொழும்புக்கு) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானியப் பிரிகேட் ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்விபரீதச் சூழலில், குறித்த பகுதிக்கு அருகாமையில் தரித்து நின்ற இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்ட இலங்கைக் கடற்படை, அந்த இரண்டாவது கப்பலில் இருந்த 208 பணியாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், குறித்த ஈரானியப் போர்க்கப்பலை இலங்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, இந்தக் கப்பல் இலங்கையின் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இயற்கை துறைமுகத்திற்கு பாதுகாப்பிற்காக (Safekeeping) நகர்த்தப்படவுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, “இலங்கைக் கடல் எல்லையில் மோதல்கள் தீவிரமடைவதைத் தவிர்க்கவும், கடலில் தத்தளித்த வீரர்களின் உயிர்களைக் காக்கவும் இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நேரடி மோதலில் இலங்கை மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே தலையிடுவதாக அரசாங்கத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆழமான கடற்பகுதியைக் கொண்ட திருகோணமலைத் துறைமுகத்திற்கு ஈரானியப் போர்க்கப்பல் நகர்த்தப்படுகின்றமையானது, சர்வதேச ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையின் இந்த அதிரடித் தீர்மானம் மற்றும் திருகோணமலையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு