Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

6 months ago
in செய்திகள்

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.

இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனுதாரர் தெரிவிப்பதாவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லது அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமாக கவிழ்க்க நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கடும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உணவில் விஷம் கலந்து அவரைக் கொலை செய்ய முயற்சி இடம்பெறலாம் எனக் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வீட்டிலிருந்து சமைத்த உணவை அவருக்கு வழங்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று, அவரது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
Next Post
ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.