Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, துபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், சர்வதேச போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயின் பிரதான விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறித்து அழிக்கப்பட்ட சிதைவுகள் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம்” என விவரித்துள்ளதுடன், அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவி வரும் ஏனைய செய்திகளை மறுத்தும் உள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் வெடித்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததுடன், ஒரு முனையமும் சேதமடைந்தது.

அந்தச் சம்பவம் “விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது” என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர், இருப்பினும் மேலதிக விவரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

ஈரானியத் தாக்குதல்கள் அபுதாபி விமான நிலையம், பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) ஆடம்பர ஹோட்டல் ஆகிய இடங்களையும் தாக்கியுள்ளன.

அத்துடன் செவ்வாய்க்கிழமை டுபாயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ட்ரோன் சிதைவுகள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
Next Post
ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு