Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு, கிழக்கில் அவ்வப்போது மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கில் அவ்வப்போது மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை: மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக மழைற்ற வானிலை நிலவும்.

காற்று: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
Next Post
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.