Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை!

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது.

‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான ‘தாழ்ந்த தளம்’ கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன

முன்னோடித் திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும்.

தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர்தின கொண்டாட்டம்-2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர்தின கொண்டாட்டம்-2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு