அடுத்த இரண்டு மாதங்களுக்கு 1,100 விமானங்களை இரத்து செய்வதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிலையம் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாகவே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானங்களில் சுமார் ஐந்து சதவீதம் இரத்து செய்யப்படும் என்றும் இது 44,000 பயணிகளை பாதிக்கும் என்றும் எயார் நியூசிலாந்து தலைமை நிர்வாகி, நிகில் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இரத்து செய்யப்பட்ட விமானங்கள் பெரும்பாலும் நியூசிலாந்துக்குள் உள்நாட்டு வழித்தடங்களில் உள்ளன.
அவற்றுள் சில சர்வதேச விமானங்களும் அடங்கும்.
எரிபொருளின் விலை தற்போது இரட்டிப்பாக உள்ளதாகவும் நியூசிலாந்து தலைமை நிர்வாகி, நிகில் ரவிசங்கர் கூறியுள்ளார்.








