யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வேளை கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








