Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழிக்க வேண்டியுள்ளது; ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு

மட்டு மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழிக்க வேண்டியுள்ளது; ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கடந்த காலத்தில் மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட மண்ணெண்னை நிரப்பு நிலையங்களில் மீனவர்களுக்கு வழங்கிய முறையின்படி இலகுவாக பெற்றோலை பெறுவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஆவணை செய்யுமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீனவர்களுக்கான பெற்றோல் இன்மை காரணமாக மீனவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இப்போது இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கியூ ஆர் திட்டம் வந்துள்ளது இதன் காரணமாக மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பெற்றோலை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

40 குதிரை வலு கொண்ட படகு இயந்திரம் நாள் ஒன்றுக்கு 2 லீற்றர் பெட்ரோல் தேவைப்படுகிறது இந்த படகு இயந்திரம் ஸ்ராட்டிங் செய்வது பெற்றோலில் அதன் பின்னர் மண்ணெண்ணையில் இயங்குகின்றது. அதற்கான மண்ணெண்ணையை எங்களிடத்தில் இருந்து பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் மண்ணெண்னை நிரப்பு நிலையங்களில் 500 லீற்றர் பெற்றோலை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்றோலை பெற்று வழங்கி வந்தோம். தற்போது கியூ ஆர் திட்டம் அறிமுகப்படுத்தியதையடுத்து பெற்றோலை பெற்று மீனவர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் இருக்கின்றது.

மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்காக சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து மோட்டார் சைக்கிளில் சென்று பெற வேண்டியுள்ளது இதனால் மீனவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவே கடந்த காலத்தில் மீனவர்களுக்கு வழங்கிய முறையின்படி வழங்க அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இலகுவாக மீனவர்கள் பெற்றோலை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் செய்து தரும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவி பணிப்பாளர், மட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்

அதேவேளை கடந்த ஊடக சந்திப்பில் மண்ணெண்ணையில் ஓடுகின்ற டீசல் வாகனங்கள் சம்மந்தமாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன் ஆனால் இன்று வரை அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்றும் பல டீசல் வாகனங்கள், பாரஊர்திகள், பஸ் வண்டிகள், மண்ணெண்ணையில் ஓடுகின்றன இதனால் எதிர் காலத்தில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது

எனவே உடனடியாக பொலிசாருடன் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு குழுவாக விசாரணை செய்து டீசல் வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடுவதை முற்று முழுதாக நிறுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு