மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை எழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூரானதும் உண்மைக்கு புறம்பானதுமான கருத்துகளை தெரிவித்துவந்தமை தொடர்பிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் முச்சக்கர வண்டி திருத்தும் நிலையம் ஒன்றிணை அனுமதியில்லாமல் அமைத்துநடாத்துவது குறித்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கொக்குவில் பொலிஸ் நிலையம் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் காணிசீர்திருத்த ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக முகப்புத்தகம் ஊடாக உண்மைக்கு புறம்பான தகவல்களையும் அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளையும் தெரிவித்துவருவதாக ஆணையாளரினால் கொக்குவில் பொலிஸார் ஊடாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அமைய குறித்த விளக்கமறியல் உத்தரவு கடந்த 16ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








