சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உண்டு என சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவே முயற்சிக்கிறது.
இந்த அணுகுமுறையானது ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதோடு, இது அரசியல் மற்றும் தார்மீக ரீதியில் ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








