Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!

முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

நியூயார்க் நகர சபையில் LGBTQIA+ சமூகத்தவர்களுக்கான ( மூன்றாம் பாலினத்தவர்) விவகாரங்களுக்குரிய அலுவலகமொன்றை முதன்முதலாக மேயர் ஸொஹரான் மம்தானி உருவாக்கியுள்ளார்.

இதன் பணிப்பாளராக டெய்லர் பிரவுன் எனும் திருநங்கையொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினத்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று – ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் கூறியிருந்த நிலையில், இவ்வாறு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒரு அலுவலகத்தை – மேயர் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வீடற்ற தன்மை, வேலை பாதுகாப்பின்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் அதிக விகிதத்தில் பாதிக்கப்படும் நிலையிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவும் வகையில், இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அலுவலகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை டெய்லர் பிரவுன் – தற்போது மாநில சட்டமா அதிபர் அலுவலகத்தின் சிவில் உரிமைகள் பணியகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நியூயார்க் நகர அலுவலகத்தில் – மிக உயர்ந்த பதவியில் அமர்த்தப்படும் திருநங்கை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க செனகல் நாட்டில் தன்பாலினத்தவர்களை திருமணம் செய்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் சட்ட மூலம் – அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ஐந்து வருட சிறை தண்டனையை 10 வருடங்களாக செனகல் நாடாளுமன்றம் அதிகரித்தது.

மேலும் அவர்களுக்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

செனகல் நாட்டில் 90 வீதமானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு ஒன்றுடன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்துப் போவதாகவும், ஆனால் அதே நிலைப்பாட்டுக்கு மாற்றமாக நியூயார்க் நகர முஸ்லிம் மேயர் ஸொஹரான் மம்தானி நடந்து கொள்வதாகவும் உலகளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
Next Post
விவசாயக் கழிவுகளில் இருந்து எரிவாயு; இலங்கைக்கு உதவும் நோர்வே!

விவசாயக் கழிவுகளில் இருந்து எரிவாயு; இலங்கைக்கு உதவும் நோர்வே!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு