Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மஹிந்த, நாமல் பெயரைச் கூறும்படி புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்னை மிரட்டினார்; கபில சந்திரசேன அதிரடி வாக்குமூலம்!

“மஹிந்த, நாமல் பெயரைச் கூறும்படி புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்னை மிரட்டினார்; கபில சந்திரசேன அதிரடி வாக்குமூலம்!

6 months ago
in மட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் பெயரை கூறுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்க திசாநாயக்க தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன நீதி மன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த வாக்குமூலத்தில்,

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்க திசாநாயக்க , “என்னைத் தெரியும் தானே?” என்று கேட்டார். அதற்கு நான் “ஆம் சார்” என்று பதிலளித்தேன்.

இது உனக்குக் கிடைக்கும் கடைசிச் சந்தர்ப்பம். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் இவரைப் போலவே ஒருவர் வந்தார். அவர் யார் என்று உனக்கும் தெரிந்திருக்கும் தானே? தெரியாவிட்டால் நான் சொல்கிறேன். அவர் கெஹெலியவின் வழக்கோடு சம்பந்தப்பட்டவர். அவருக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களை வழங்கினேன். அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை. அவருக்கு குற்றப்பத்திரிகை (Indictment) தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உன்னுடன் இருப்பவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். பெரியவரின் பெயரையும் சிறியவரின் பெயரையும் சொல். மற்றது, உனது மனைவியைப் பற்றி…”

ஏன் விளங்குவதில்லையா? மஹிந்த மற்றும் நாமல் பற்றிச் சொல். நான் நீதித்துறையிலிருந்து (Judiciary) இதற்காக வந்தது அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்கே. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள். இல்லையென்றால் உனக்கும் அந்த மனிதன் செய்துகொண்டதுதான் நடக்கும். நீயே கழுத்தில் கயிறு போட்டுக்கொள்ளும் நிலைக்கு நான் வேலைகளைச் செய்வேன்.”

“மேற்கூறிய மிரட்டல் காரணமாக நான் பயமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எனக்கும் என் வாழ்க்கையை வெறுக்கச் செய்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனதிற்குத் தாங்கிக்கொள்ள முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தினால், எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரிக்குத் தேவையானவாறு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் எனது மனைவியின் பெயர்கள் உட்பட அனைத்தையும் சேர்த்து வாக்குமூலம் அளித்தேன்.”

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களோ, அல்லது எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் செயல்பாட்டில் அவர்கள் ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்கள் அல்லது முறையற்ற பங்களிப்பை வழங்கினார்கள் என்றோ எனது வாக்குமூலத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த விடயங்கள் என்னால் தன்னிச்சையாக (சுயமாக) தெரிவிக்கப்பட்டவை அல்ல. அவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மிரட்டல் காரணமாகவே கூறப்பட்டவை.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
மத்திய கிழக்கு போர் சூழலினால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

மத்திய கிழக்கு போர் சூழலினால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு