Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘சர்வதேச சந்தைக்கு வழங்க மேலதிக மசகு எண்ணெய் இல்லை’; கையை விரித்த ஈரான்

‘சர்வதேச சந்தைக்கு வழங்க மேலதிக மசகு எண்ணெய் இல்லை’; கையை விரித்த ஈரான்

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள மசகு எண்ணெயோ அல்லது மேலதிக எண்ணெய் கையிருப்போ இல்லை’ என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் மசகு எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை, ஈரானின் எண்ணெய் அமைச்சு மறுத்துள்ளது.

இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,

“தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் உள்ள மசகு எண்ணெய் அல்லது உபரி கையிருப்பு ஏதும் ஈரானிடம் இல்லை. தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் கருத்துக்கள், எண்ணெய் வாங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதையும், சந்தையின் மனநிலையைச் சீர்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, சர்வதேச எண்ணெய் எரிவாயு சந்தை ஏற்கனவே பெரும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த மறுப்புச் செய்தி, நிலையற்ற சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

முன்னதாக, ஈரானின் மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடைகளை, இந்த ஆண்டு ஏப்ரல் 19 வரை தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்தத் தளர்வின் கீழ், ஈரான் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்குள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரானிய மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எண்ணெய் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இது உலகளாவிய எண்ணெய், எரிசக்தி விநியோகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
Next Post
பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர் கைது!

பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.