மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை மறைக்கோட்ட (மட்டக்களப்பு மறைமாவட்டம்) பங்கு மக்களின் பங்கேற்புடன் தாண்டியடி திருச்சிலுவை மலையில், திருச்சிலுவை பாதையான இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு நினைவுகூரப்பட்டது.
நேற்று (21) காலை 09 மணிக்கு ஆரம்பமான குறித்த வழிபாடுகள் நண்பகல் விசேட ஆராதனைகளுடன் நிறைவுபெற்றது.
வழிபாடுகளின் முடிவில் அன்னதானங்கள் வழங்கப்பட்டதுடன், குறித்த சிலுவைப்பாதையில் மறைவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கன்னியாஸ்திரிகள், குருக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மக்கள் வேண்டுதலுடனும், பற்றுதலுடனும் கலந்துகொண்டிருந்த அதேவேளை, சிலுவைப்பாதையின் நிறைவில் மூன்று மறைக்கோட்ட முதல்வர்களான அருட்தந்தையர்களும், மறைமாவட்ட குரு முதல்வரான ஜோட்ஸ் ஜீவராஜ் அருட்தந்தை ஆகியோரால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


















