Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ‘மொட்டு’ கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ‘மொட்டு’ கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

4 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

2009 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைகள் மீள விரைவில் ஆரம்பிக்கப்படும் என லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச அமைப்பு ஒன்று அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அவ்விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால குறிப்பிட்டுள்ள விடயங்கள்.

2009 ஆம் ஆண்டு இறுதி போருக்கு முன்னர் ஜனாதிபதியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்யப் போவதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அன்று புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த கபில ஹெந்தவிதாரண இது தொடர்பில் பரிசோதனைகளை நடத்தி தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த மட்டக்களப்பில் இருந்த லின்டன் வரதராஜன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திருகோணமலையில் வசித்த தவராசா சுபாஸ்கரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மேலும் படைகள் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பில் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் குறித்த சம்பவத்தை மேலதிக விசாரணைகளுக்காக சிஐடிக்கு பாராப்படுத்தினார்.

அவர்கள் தீவிர விசாரணைகளை மேற் கொண்டதில் சுபாஸ் என்பவரை கைது செய்கின்றனர். இவர்தான் இந்த சம்பவத்திற்கு தொடர்பாளராக செயற்பட்டுள்ளார்.

அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மஹிந்த போகும் இடங்கள் மற்றும் நேர காலங்களை ஒரு அரசியல்வாதியிடம் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு கோடியே 17 இலட்சம் வழங்கியதாகவும் அது போதாது என்று கெப் வண்டி ஒன்றையும் கேட்டுள்ளார்.

பணம் மற்றும் கெப் வண்டியை தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த அரசியல்வாதிக்கு கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சுபாஸ் மற்றும் அரசியல்வாதியும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் கொலை செய்ய முயற்சித்த போது அந்த அரசியல் வாதி தான் வேண்டாம். அதிகமான உயிர்கள் பலியாகலாம் என தடுத்து நிறுத்தியுள்ளார்.

அவர் மஹிந்த ராஜபக்ச செல்லும் இடங்கள் மற்றும் நேரகாலங்களை கொலையாளியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான முழு விபரங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களம் பெற்றுக் கொண்டு குறித்த அரசியவாதியை ஆதாரங்களுடன் கைது செய்ய இருந்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் பெசில் ராஜபக்ச இந்;த விடயத்தில் தலையிட்டு குறித்த அரசியல்வாதியின் வீட்டுக்கு முழு விபரங்கள் அடங்கிய ஒரு சீடியை அனுப்பி அவரிடம் தொலைபேசியில் கதைத்து உன்னை கைது செய்யப் போகிறோம் முடிந்தால் எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு பெசில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த அரசியல்வாதி மஹிந்தவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர் பசிலின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு கட்சியில் இணைந்து கொண்டார்.

குறித்த அரசியல் வாதி அன்று ஐ.தே.கட்சியில் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். இன்று மொட்டு கட்சியின் குருநாகல் தொகுதி அமைப்பாளராகவும் செயற்படுகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை.

ஆனால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருக்கின்றனர்.

அரச தலைவரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் தகவல்கள் வழங்கியமை பாரிய குற்றமாகும். அது தொடர்பில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
Next Post
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.