Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

6 months ago
in செய்திகள்

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி லுணுவில, வென்னப்புவ மற்றும் பண்டிரிப்புவ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார்.

கற்பிட்டி, நுரைச்சோலை – மாம்புரிப் பகுதியில் வசிக்கும் குறித்த மேசன் தொழிலாளி, கடந்த 23ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இதன்போது, இனந்தெரியாத கும்பலொன்று கதவைத் தட்டி, அவரைப் பலவந்தமாக வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளது.

இது குறித்து அவரது மனைவி நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட நபர் பிரதான சந்தேக நபரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமையே இந்தக் கடத்தலுக்குக் காரணமாகும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அவரை பண்டிரிப்புவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நாய் கூண்டுக்குள் அடைத்து வைத்து அக்கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

பல மணி நேரம் உணவு மற்றும் நீரின்றி நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலாளி, தற்போது சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், பிரதான சந்தேக நபர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேலி செய்த ஈரான்

அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேலி செய்த ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.