Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்து சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் காலை நேரங்களில் இன்னும் அதிக வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு விளக்கமளிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘அதிக வெப்பத்துடனான காலநிலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சூரிய கதிர் வீச்சு இலங்கையின் அமைவிடத்தை அண்மித்து நேரடியாக கிடைக்கின்றமை, நீர் நிலைகளிலுள்ள நீர் நீராவியாகி வாயுமண்டலத்தில் சேர்ந்தாலும் முகில்கள் உருவாகும் தன்மை மிகவும் குறைந்துள்ளது. காற்றின் வேகமும் குறைந்துள்ளதால் வாயுகோளத்தின் நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் இந்த வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்தே சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்தக் காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் காலை நேரங்களில் இன்னும் அதிக வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எது எவ்வாறாக இருந்தாலும், இந்த வெப்ப காலநிலையை சமாளித்து கடமைகளை முன்னெடுப்பதற்கு வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருப்பது பொருத்தமானதாக இருக்கும். அதனூடாக வெப்ப ஈர்ப்பு குறைக்கப்படும். அதிக சோர்வை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுகிறார்கள் என்றால் தொடர்ச்சியாக நீரை அருந்த வேண்டியது அவசியமாகும். ஆனால் இனிப்புப் பானங்களை அருந்துவது பொருத்தமற்றது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு