Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைப் பொருளாதாரத்திற்குப் பாரிய ஆபத்து; சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைப் பொருளாதாரத்திற்குப் பாரிய ஆபத்து; சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரிக்கை!

5 months ago
in செய்திகள்

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், இலங்கையின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு, போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தியிருந்த உலகளாவிய எரிபொருள் விநியோகச்சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்துப்பாதை என்பவற்றில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், இலங்கைக்கு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில், உணவுப்பொருட்களில் விலையேற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், மத்திய கிழக்கு, போர் தொடரும் பட்சத்தில் வாழ்க்கைச்செலவு மேலும் அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அழுத்தங்கள் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு