Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தக் கோரிக்கை குறித்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க மக்களுக்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஈரான் ஒருபோதும் பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட நாடு அல்ல என்பதை பெசெஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா உருவாவதற்கு முன்பிருந்தே, ஈரான் எந்தவொரு வெளிநாட்டின் மீதும் தானாக முன்வந்து போரைத் தொடங்கியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்திற்கு ஈரான் அச்சுறுத்தல் என்பது போன்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவும், இது ஈரான் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்யான பிம்பம் என்றும் அவர் சாடியுள்ளார்.

அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்காக ஒரு ‘நிழற்போரை’ முன்னெடுத்து வருவது ஒரு துரதிஷ்டவசமான உண்மை என அவர் விபரித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னம் அதிகரித்துள்ள சூழலில், தனது நாட்டைப் பாதுகாப்பதற்கும், அதற்காவே ஆயுதங்களை உருவாக்குவதற்கும் ஈரானுக்கு முழு உரிமை உண்டு என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் ஒரு நட்பு நாடு என்பதையும், தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் தற்காப்பு முயற்சிகளே என்பதையும் அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பை விடுத்து, நேரடியாக அமெரிக்க மக்களுக்கே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு