Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்த பாட்டியின் பேத்தியாவார்.

தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் உனவடுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே சந்தேகநபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

தெலிகட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷத சில்வாவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஜி. சரத்சந்திர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம்; GMOA அதிரடி அறிவிப்பு!

நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம்; GMOA அதிரடி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு