Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கந்தளாயில் பெரும் சோகம்; ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

கந்தளாயில் பெரும் சோகம்; ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கந்தளாய், பேராற்று வெளிபகுதியில் உள்ள ஆற்றில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பேராற்று வெளியைச் சேர்ந்த 16 வயதுடைய ரிஸ்லான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கந்தளாய் தி/ பேராற்று வெளி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று, இம்முறை O/L பரீட்சையை எழுதியிருந்தார்.

நேற்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில், நான்கு இளைஞர்கள் இணைந்து குறித்த ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

வழக்கமாக அவர்கள் நீர் அதிகமாக இருக்கும் போது, ஒரு இடத்தில் குளித்து நீரோட்டத்துடன் மிதந்து அடுத்த பகுதியில் கரையேறும் பழக்கம் கொண்டிருந்தனர்.

நேற்றும் அதேபோல் குளித்தபோது, ரிஸ்லான் அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டார் என எண்ணிய நண்பர்கள், அவரது உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முடித்து வீடு திரும்பியபோது, அவர் வீடு வராததை உணர்ந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நீரில் சிக்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கந்தளாய் பொலிஸார் சடலத்தை மீட்டு கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்; வன்முறை கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!

பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்; வன்முறை கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு