தானும் தனது குழுவினரும் நாட்டில் ஏற்படும் சமூகப் பேரழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற
எப்போதும் உழைத்து வந்ததாகவும், ஆனால் இறுதியில் மஹிந்த ராஜபக்கஷ ஒரு
கொலையாளியாகவும் திருடனாகவும் சித்திரிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நமல்
ராஜபக்கஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ இந்நேரம் நாட்டின் ஜனாதிபதியாக ஆகியிருந்தால், அவர்
அநேகமாக நோபல் அமைதிப் பரிசைப் பெற்றிருப்பார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நமல்
ராஜபக்கஷ கூறுகிறார்.

“நாங்கள் எப்போதும் இந்த நாட்டில் ஏற்படும் சமூகப் பேரழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற
முயன்றோம். சமூகப் பேரழிவைத் தடுப்பதற்காகவே நாங்கள் விடுதலைப் புலிகளுடன் மோதினோம்.
இல்லையென்றால், ‘நீங்கள் அந்தப் பக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், நாங்கள் இந்தப் பக்கத்தைப்
பார்த்துக் கொள்கிறோம்’ என்று நாங்கள் சொல்லியிருக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்கஷ இருந்திருந்தால், அவர் அநேகமாக இன்று நோபல் அமைதிப் பரிசைப்
பெற்றிருப்பார். இறுதியில், உலகம் அவரை ஒரு கொலையாளியாகவும் திருடனாகவும் மாற்றிவிட்டது.
அதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் அவர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தார்.








