Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கு வாழ்வாதார உதவி

மட்டக்களப்பில் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கு வாழ்வாதார உதவி

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சமூகங்களை இணைத்தல், அமைதியை கட்டி எழுப்புதல் – மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும் UNOPS மற்றும் விருத்தி அமைப்பின் பங்களிப்பிலும் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவி திட்டங்களும் வறுமைக்கோட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை மற்றும் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், இளம் பெண்ணிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது மீராவோடை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் முன்னெடுக்கும் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் 15 பெண்களுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாஞ்சோலை பகுதியில் பாடசாலை இடைவிலகளை தடுக்கும் வகையில் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட 14 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
Next Post
NDB வங்கி நிதி மோசடி தொடர்பில் முகாமையாளர் உட்படப் பலர் கைது

NDB வங்கி நிதி மோசடி தொடர்பில் முகாமையாளர் உட்படப் பலர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு