பங்களாதேஷில் 100இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளமையால் கடந்த 3 வாரங்களில் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று, மாணவர்கள் போராட்டம் போன்ற காரணங்களால் நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த பங்களாதேஷ் அரசு நாடளாவிய ரீதியில் அவசரகால தடுப்பூசி முகாம்களை தொடங்கியுள்ளது.








