Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் அவர்கள்  கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு இன்று (07) வரவேற்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் கோட்டைமுனை விளையாட்டு புற்தரை மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் ஆடுகளங்களை சிறந்த முறையில் தயார் செய்வதற்கு இவரின் பயிற்சிகள் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக  மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ் சர்வதேச தரத்தில் இவ் மைதானம் காணப்படுவதுடன் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் வரவாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!

குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு