ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும், கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது புதிய நியமனம் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







