Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்ற அன்றைய சரத்வீரசேகரவின் கதை இன்று முஜிபுர் ரஹ்மானையும் விட்டுவைக்கவில்லை; சஜித்

மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்ற அன்றைய சரத்வீரசேகரவின் கதை இன்று முஜிபுர் ரஹ்மானையும் விட்டுவைக்கவில்லை; சஜித்

5 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் மட்டுமல்லாமல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளாக சித்திரிக்க இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இவர்களே அன்று மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்று கூறி டாக்டர் ஷாபி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இழைத்த பல்வேறு துயரங்களையும் அவமானங்களையும் இலேசாக மறந்துவிட முடியாது.

இத்தகைய இனவாத செயல்களை செய்த இவர்களே இன்று அரசியல் தேவைகளுக்காக முஜிபுர் ரஹ்மானை பிரதான சூத்திரதாரியாக பெயர் சூட்டியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

2020 காலத்தில் மக்கள் ஆணையை பெற்று ஆட்சியை அமைத்து பொலிஸ் அமைச்சராக செயல்பட்ட சரத் வீரசேகர, இன்று முஜிபுர் ரஹ்மானை உயிரத்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்தாலும், அன்று அவர் இது தொடர்பாக எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்புகிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்வோம் என்று கூறியே அன்று இவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

இப்போது முஜிபுர் ரஹ்மானுக்கு IS தொடர்புகள் இருப்பதாகவும், அவை ஆணைக் குழு அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

அவ்வாறு பெயர் இடம்பெற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட புத்தகம் குறித்த விமர்சனத்தால் தான் இச்சமயம் இந்த நாணயமற்ற விமர்சனம் இவர் மீது வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் நலனுக்காக பல்வேறு துறைகள் தொடர்பிலும் நிபுணத்துவமான கருத்துக்களை முன்வைக்கும் மக்கள் தலைவர் என்பதனால், இன்றும் அவரை இலக்கு வைத்து மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஏற்படுத்திய இனப்பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த அடிப்படைவாதம் நாட்டிற்கு பொறுத்தமற்றது.

நடைமுறை பௌத்தராக புத்த பெருமானார் போதித்த தர்மத்திற்கு அமைவாக இன வேற்றுமையை ஏற்படுத்தாமல் இன மத சமூக பிரிவுகளிடையே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இலங்கையின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டியது ஆட்சி அதிகாரம் அல்லது அரசியல் அடையாளத்தைக் காக்கும் வகையில் அல்லாமல் உண்மையை அறிந்துகொண்டு செயல்படுவதன் மூலமேயாகும்.

எனவே உண்மையை மையமாக வைத்து செயற்பட வேண்டும். இனவாதத்தை அடிப்படையாக வைத்து நாட்டை அழிக்கும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
ஹம்பாந்தோட்டையில் பாரிய விபத்து; அரச பேருந்து படு சேதம்

ஹம்பாந்தோட்டையில் பாரிய விபத்து; அரச பேருந்து படு சேதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.