Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுதாவளை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகப் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்; கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம்!

களுதாவளை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகப் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்; கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம்!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை அனுப்பப்பட்ட கடித்தில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தொடர்ச்சியாக சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதோடு, தன்னிச்சையான முடிவுகளையும் எடுப்பதனால் சபையில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதுடன் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

பிரதேச சபையில் இதுவரை காலமும் பல மோசடிகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன அவற்றை கடந்தகாலங்களில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். அதனை மீண்டும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கடந்த 08.07.2025 அன்று 10 லோட் கழிவு மண் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரது காணியில் பறிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பணம் ரூபா 80000.00 தவிசாளரால் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டதாக அறிய முடிகின்றது. ஆனால் ஒரு மாதம் முடிந்தும் இன்றுவரை அது பிரதேச சபைக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் தவிசாளரினால் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே கடந்த 11.07.2025 அன்று ருபா 4500.00 பெறுமதியான 375 கிலோ சேதனப்பசளை போரதீவுப் பற்று பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணம் இன்றுவரை பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப் பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார்.

31.07.2025 அன்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு ரூபா 6000.00 பெறுமதியான 500 கிலோ சேதனப்பசளை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணம் இன்றுவரை பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப் பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார்.

தவிசாளர் அலுவலக லேன் குரோசர் வாகனத்தை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றார். 26.07.2025 மற்றும் 27.07.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தனது கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்றுள்ளார்.

02,08.2025 மற்றும் 03,08.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலக வாகனத்தில் தனது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ளார். குறித்த வாகனத்தின் எரிபொருள் செலவு அதிகம் என்பதுடன் பராமரிப்பு செலவும் அதிகம். இருந்தபோதும் தனது தனிப்பட்ட மற்றும் கட்சியின் தேவைகளுக்காக நீண்ட தூர பயணங்களுக்கு இவ் வாகனத்தினைப் பயன்படுத்தி வருகின்றார்.

சபை அமர்வுகளின்போது உறுப்பினர்களை பேச விடாது தடுப்பதுடன் பேச முன்வருகின்ற உறுப்பினர்களை வெளியேற்றுவேன் என மிரட்டுதல் மற்றும் சபை கூட்டங்களில் எடுக்கப்படாத தீர்மானங்களை கூட்டக்குறிப்புகளில் உட்புகுத்தல், சபை அனுமதியின்றி வேலைவாய்ப்பு வழங்குதல்

சபை உத்தியோகத்தர்களை உள்ளக மற்றும் சபைகளுக்கிடையே இடமாற்றம் செய்தல், சபை அனுமதியின்றி திட்டங்களை செயற்படுத்தல் உதாரணமாக ஆங்கிய பாலர் பாடசாலை அமைத்தல், இதன் மூலம் பெருமளவு நிதி சபை அனுமதியின்றி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு ஆதரவு வழங்காத உறுப்பினர்களுக்கும் அவர்களுக்குரிய வட்டாரங்களிலும் எந்தவிதமான திட்டங்களையும் செயற்படுத்தாது பழி வாங்குதல். செயலாளரின் அனுமதியின்றி அவரது மடிக் கணினியினை திருடியதாக செயலாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

செயலாளரின் அலுவலக அறையினை பூட்டி வைத்துள்ளதுடன் செயலாளர் அலுவலகம் சென்றபோது தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் செயலாளரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பொலிசார் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது செயலாளர் தனது கடமைகளை உளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலிருந்து மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலிருந்து தனது கடமைகளை செய்வதனால் சபை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும். ஒரு அரச அதிகாரியினை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரு அரசியல்வாதிக்கு உண்டா? தவிசாளருக்கு இவ் அதிகாரங்களை யார் வழங்கியது.

சபையின் உத்தியோகத்தர்களை கடமை நேரத்தில் தனது கட்சி சார்ந்த மற்றும் தனது நிகழ்வுகளில் பங்குபற்ற செய்தல். தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி உறுப்பினர்களைக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

சபை அனுமதியின்றி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் கருவள சிகிச்சை நிலையத்தினை செயற்படுத்துவதற்கு சபையின் நிதியினை பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருதல்.

தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு மக்களை குழப்பும் வகையில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்தல் (தனியார் வகுப்புக்களை கட்டுப்படுத்தல், ஆலயங்களில் நிதி அறவிடல், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் வெதுப்பக வாகனங்கள் ஓடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை சபை அனுமதியின்றி எடுத்தல்.

தனக்கு எதிராணியில் உள்ள உறுப்பினர்கள்மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிசில் பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து உறுப்பினர்களை அச்சுறுத்தல். தனிப்பட்ட அரசியலுக்காக சபையில் எடுக்கப்படாத தீர்மானங்களை சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடல்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தங்களுக்கும், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம் ஆனால் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தவிசாளர் தொடர்ந்தும் மோசடிகளில் ஈடுபடுவதுடன் சட்டத்திற்கு முரணான வகையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துவருவதனால் சபை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் சேவையினைப்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
Next Post
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.