Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் காதலியை கொலை செய்த நிலையில் அவரது புதிய காதலரையும் படுகாயப்படுத்திய சீன இளைஞன் தலைமறைவாகியிருந்த நிலையில் 14 நாட்களின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு தர்மபால மாவத்தையில் உள்ள கட்டடம் ஒன்றின் 19வது மாடியில் ஒளிந்திருந்தபோது, குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 2200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் என்ற சீன மாணவியாகும்.

சந்தேக நபர் ஒரு பிரபல சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த காதல் உறவு முறிந்துள்ளது.

இந்த நிலையில், மாணவி கொழும்பு துறைமுக நகரத்தில் பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி, களுபோவில பீரிஸ் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது பொருட்களை எடுத்துச் செல்ல மாணவி தனது புதிய காதலருடன் வந்துள்ளார்.

இதன்போது அங்கு மறைந்திருந்த முன்னாள் காதலன், கூர்மையான ஆயுதத்தால் மாணவியைக் குத்திக் கொலை செய்ததோடு, அதனைத் தடுக்க வந்த புதிய காதலரையும் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றைய சீன இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு