Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட் வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள் போல பிரயாணிக்கும் கொள்ளையர்கள் பஸ் வண்டியில் தனியாக யார் பிரயாணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தமது பையில் இருந்து கவர் உடையாத மயக்க மருந்து கலந்த லெமன் பெப் பிஸ்கட்டை எடுத்து கொடுத்து வழங்குவார்கள் அதனை உடைத்து சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் காப்பு மோதிரம், சங்கிலி, போன்ற தங்க ஆபரணங்கள் மற்றும் அவர்களுது கைபையில் இருக்கும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுவார்கள் மயக்கமடைந்தவர் பின்னர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு 3 தினங்களுக்கு பின்னர்தான் சுயநிலைக்கு வருகின்றனர்.

இவ்வாறு அண்மை காலமாக பஸ்வண்டியில் பிரயாணித்த பலரிடம் கொள்ளைகள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு கிடைத்துள்ளது எனவே குறித்த மாவட்டங்களில் இருந்து தனியாக பிரயாணம் செய்வர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடகூடாது என்பதுடன் பொதுமக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் செய்படவும் என அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு