Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குமார் சங்கக்கார மற்றும் ரணிலின் பெயரை பயன்படுத்தி முதலீட்டு மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை

குமார் சங்கக்கார மற்றும் ரணிலின் பெயரை பயன்படுத்தி முதலீட்டு மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதான காணொளியொன்று தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார குறித்த வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த காணொளி போலியானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Fact crescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், குறித்த காணொளி மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் ஒரு திட்டமிடப்பட்ட இணைய மோசடியின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு போலிச் செய்தியில், குமார் சங்கக்கார மற்றும் பிரபல வர்த்தகர் ஒதாரா குணவர்தன ஆகியோர் இவ்வாறான முதலீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பொய்யாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த செய்திகள் நீக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரையும் இதனுடன் தொடர்புபடுத்தி வேறு போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இவை முற்றாக மோசடியானவை என உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கணனி அவசரப் பிரதிபலிப்புத் தளம், இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார இது குறித்து விளக்குகையில், இவ்வாறான மோசடிகள் உண்மையானவை என நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் தனிப்பட்ட தரவுகள் அல்லது பேஸ்புக் கணக்குகளின் விபரங்களைத் திருடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான தகவல்களைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான விடயங்கள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் மற்றும் உண்மை கண்டறியும் தரப்பினர் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு