Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்த புதிய மோட்டார் சைக்கிளை கடந்த 8ஆம் திகதி இலக்கத் தகடுகள் இன்றியும், வருமான அனுமதிப்பத்திரம் இன்றியும் செலுத்திய குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக 10,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.

அவ்வளவு பணத்தை வழங்க முடியாது என முறைப்பாட்டாளர் தெரிவித்த போது, சந்தேகநபர் மதுபானப் போத்தல் ஒன்றைக் கோரியுள்ளார்.

அதனை வழங்கும் வரை முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்பட்டிருந்த கடிதத்தை தன்வசம் வைத்துக்கொண்டு, நேற்று (9) குறித்த மதுபானப் போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்றுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள மூடியிருந்த கட்டிடமொன்றிற்கு அண்மையில் வைத்து இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு