Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் சட்டவிரோதமாக செயற்பட்ட 07 பேருந்துகளை கைப்பற்றிய அதிகாரிகள்

கொழும்பில் சட்டவிரோதமாக செயற்பட்ட 07 பேருந்துகளை கைப்பற்றிய அதிகாரிகள்

3 months ago
in செய்திகள்

கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 07 பஸ்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ்கள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலித்துள்ளதோடு, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஷெரின் அத்துகோரல மேலும் தெரிவிக்கையில்,

பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பஸ்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பயணிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் மத்திய பஸ் நிலையம், பெஸ்டியன் மாவத்தை முனையம் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் உங்களுக்காக சட்டப்பூர்வமான போக்குவரத்து வசதிகளை நாம் தயார் செய்துள்ளோம்.

இவ்வாறான சட்டவிரோத சேவைகளைப் பயன்படுத்துவது உங்கள் உயிருக்கு ஆபத்தையும் பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தும். நேற்று நாம் முன்னெடுத்த சோதனையில் இவ்வாறான 07 பஸ்களைக் கைப்பற்றி பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!

July 23, 2026
500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் உயிர்பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி; பின்னணியில் சோழர் காலத்து வரலாற்றை அழிக்கும் சதி

மட்டக்களப்பில் உயிர்பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி; பின்னணியில் சோழர் காலத்து வரலாற்றை அழிக்கும் சதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு