பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த உடுகம்பல அலயா என்பவரே இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு போதைப்பொருள் வியாபாரியும் ஆவார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைவில் அவர் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









