Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரடி பொம்மைக்குள் ஐஸ் போதைப்பொருள்; முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கரடி பொம்மைக்குள் ஐஸ் போதைப்பொருள்; முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொரியர் சேவையின் மூலம் கரடி பொம்மைக்குள் சூட்சுமமாக மறைத்து ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, ஏப்ரல் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது, கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொருட்களில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மறைக்கப்பட்டிருந்த சுமார் 107 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் அளவிடப் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் தராசு, இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் பணத் தொகையும் சான்றுப் பொருட்களாக கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர், காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினராக இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் முதற்கட்டமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
Next Post
ஐக்கிய அரபு அமீரக விசா நடைமுறைகளில் மாற்றம்; பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் கட்டாயம்

ஐக்கிய அரபு அமீரக விசா நடைமுறைகளில் மாற்றம்; பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் கட்டாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு