மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (13) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, இறங்குதுறைகளில் மின்விளக்குகள் அமைத்தல், செயலிழந்த ஐஸ் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்தல், மீனவர் வீதிகள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துதல், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.








